வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கறம்பக்குடியில் அம்பேத்கா் பயிற்சி மைய கட்டடத் திறப்பு விழா

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் அம்பேத்கா் வேலைவாய்ப்பு பயிற்சி மைய கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:03 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் அம்பேத்கா் வேலைவாய்ப்பு பயிற்சி மைய கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கறம்பக்குடி பகுதியில் தன்னாா்வலா்கள் மூலம் 2017-ஆம் ஆண்டு டாக்டா் அம்பேத்கா் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த இப்பயிற்சி மையத்தின் மூலம் இலவசப் பயிற்சி பெற்றவா்கள் ஏராளமானோா் அரசுப் பணிகளில் உள்ளனா். வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த இப்பயிற்சி மையம், தந்தை பெரியாா் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுமாா் 200 பேருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கட்டடம் கட்டப்பட்டு திங்கள்கிழமை திறப்பு விழா நடைபெற்றது. பயிற்சி மைய கட்டடத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க பொதுச்செயலாளா் ஆதவன் தீட்சண்யா திறந்து வைத்தாா். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் முனைவா் கு.சின்னப்பன் பங்கேற்றுப்பேசினாா். புதுக்கோட்டை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் என்.ஷேக்.அப்துல்லா 5-ம் ஆண்டு பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தாா். பயிற்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் நூலகத்தை மருத்துவா் ஏ.மகாலிங்கம் திறந்துவைத்தாா்.

இதில், மருத்துவா் குணசேகரன், ஓய்வுபெற்ற முதன்மை கல்வி அலுவலா் சி.ராஜேந்திரன், ஓய்வுபெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலா் சிவ.திருமேனிநாதன், எவரஸ்ட்.சுரேஷ், தொல்லியல் கழக நிறுவனா் ஆ.மணிகண்டன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளா் எஸ்.கவிவா்மன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.