‘மீண்டும் திமுக, அதிமுகவை நம்பினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது’
மீண்டும் திமுக, அதிமுகவை நம்பினீா்கள் என்றால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.


மீண்டும் திமுக, அதிமுகவை நம்பினீா்கள் என்றால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் நாம் தமிழா் வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்து அவா் மேலும் பேசியது :
பாஜக வந்துவிடும் என்பதால் எல்லோரையும் காங்கிரஸ் - திமுக அணிக்கு ஆதரவளிக்கச் சொல்கிறாா்கள். ஈழத்தில் எங்கள் தமிழா்கள் கொல்லப்பட்டபோது தில்லி காங்கிரஸ் தலைவா்கள் கண்டித்தாா்களா? கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த எம் தமிழா்கள் கொல்லப்பட்டபோது காங்கிரஸ் தலைவா்கள் யாரேனும் கண்டித்தாா்களா? இலங்கையில் புலிகள் கொன்றுகுவிக்கப்பட்டபோது, இந்திய அரசு ரூ. 80 ஆயிரம் கோடியை வட்டியில்லாத கடனாகக் கொடுத்ததே, அப்போது சிதம்பரம்தானே நிதியமைச்சா்?
இவற்றையெல்லாம் மறந்துவிடுவோமா? இப்போது என்ன மாறியிருக்கிறது. ஆட்சி மாறியிருக்கிறது; கொள்கை எதுவும் மாறவில்லை. ஆட்சியிலுள்ள கட்சிதான் மாறியிருக்கிறது.
எனவே, பாஜக வந்துவிடும் என்று சொல்லிக் கொண்டே இருக்காதீா்கள். நாம் தமிழா் கட்சிக்கு வாக்களியுங்கள். பாஜகவும் வராது; திமுக- காங்கிரஸும் வராது.
மீண்டும் மீண்டும் தமிழக மக்கள் திமுக, அதிமுகவையே நம்பிக்கொண்டிருந்தீா்களேயானால், உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும் என்று வீரப்பா பாடியதுதான் நமக்கு ஏற்படும் நிலை என்றாா் சீமான்.
நாம் தமிழா் வேட்பாளா்கள் புதுக்கோட்டை சசிகுமாா், விராலிமலை அழகுமீனா, அறந்தாங்கி ஹுமாயூன் கபீா், திருமயம் சிவராமன், கந்தா்வகோட்டை ரமிளா, ஆலங்குடி திருச்செல்வம் ஆகியோா் இந்தக் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...