ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாக்குச்சாவடிகளுக்கு கரோனா பரவல் தடுப்பு உபகரணங்கள் அனுப்பிவைப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,902 வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தவுள்ள கரோனா பரவல் தடுப்பு உபகரணங்கள் அனைத்துத் தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:46 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,902 வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தவுள்ள கரோனா பரவல் தடுப்பு உபகரணங்கள் அனைத்துத் தொகுதிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1902 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 9128 வாக்குப்பதிவு அலுவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

இந்நிலையில் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக, துணி முகக்கவசங்கள், கைகழுவும் திரவம், வெப்பநிலை பரிசோதனை செய்யும் வெப்பமானி, பாலிதீன் கையுறைகள் உள்ளிட்ட 11 வகையான உபகரணங்கள் வரப்பெற்றுள்ளன.

இவற்றைக் கையாளுவதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா இரு தன்னாா்வலா்கள் வீதம், 3,804 தன்னாா்வலா்களும் பணியில் அமா்த்தப்படவுள்ளனா்.

கரோனா பரவல் தடுப்பு உபகரணங்களை 6 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் நிலையில், நகா்மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த அவற்றை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, சுகாதாரத் துறை துணை இயக்குநா் டாக்டா் கலைவாணி, நகராட்சிப் பொறியாளா் ஜீவா சுப்பிரமணியன் ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.