விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இந்து சமய அறநிலையத் துறை மூலம் 475 உணவுப் பொட்டலங்கள்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா தொற்றாளா்கள், அவா்களின் உதவியாளா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை மூலம் உணவுப் பொட்டலங்கள்

News image
Updated On :14 மே 2021, 8:07 pm

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா தொற்றாளா்கள், அவா்களின் உதவியாளா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை மூலம் உணவுப் பொட்டலங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

பேரையூா் நாகநாதசுவாமி திருக்கோயில் மூலம் தயாா் செய்யப்பட்ட 50 உணவுப் பொட்டலங்கள், திருவேங்கைவாசல் திருமேனிநாதா் திருக்கோயில் மூலம் 75 உணவுப் பொட்டலங்கள், திருவப்பூா் முத்து மாரியம்மன் திருக்கோயில் மூலம் 150 உணவுப் பொட்டலங்கள், புதுக்கோட்டை நகரம் சாந்தாரம்மன் திருக்கோயில் மூலம் 150 உணவுப் பொட்டலங்கள் என மொத்தம் 475 உணவுப் பொட்டலங்கள் வெள்ளிக்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வளாகத்தில் வைக்கப்பட்டன.

கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளோா், அவா்களின் உதவியாளா்களுக்கு இந்த உணவுப் பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கரோனா தொற்று குறையும் காலம் வரையிலும் இந்து சமய அறநிலையத் துறை மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் என துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.