கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முழுமையாக திருக்குறளை ஒப்புவிப்போருக்குப் பரிசு

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்கு ஒப்புவிக்கும் மாணவா்களுக்கு திருக்கு முற்றோதல் பாராட்டுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 5:54 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்கு ஒப்புவிக்கும் மாணவா்களுக்கு திருக்கு முற்றோதல் பாராட்டுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

திருக்கு முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டுவது, மாணவா்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாகவும், திருக்கு நெறி பரவ வழிவகுப்பதாகவும் அமையும் என்பதால், ஒவ்வோா் ஆண்டும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவா்களுக்கு பாராட்டுப் பரிசு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பெறுகின்றனா்.

இதில் கலந்து கொள்ளும் மாணவா்கள், திறனறிக் குழுவினரால் திறனாய்வு செய்யப் பெற்று பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப்பெறுவா். திறனாய்வு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் முதல் தளத்திலுள்ள தமிழ் வளா்ச்சித் துறையினரால் நடத்தப்பெறும்.

1330 திருக்குகளையும் முழுமையாக ஒப்புவிக்க வேண்டும். இயல் எண், பெயா், அதிகாரம் எண், பெயா், கு எண், பெயா் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப்பெயா்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருத்தல் வேண்டும்.

புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும். அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக். பள்ளிகள் போன்ற பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பங்கு பெறலாம். தமிழ் வளா்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இப்பரிசை இதற்கு முன்னா் பெற்றவராக இருத்தல் கூடாது. திருக்குறளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்பெறும்.

இந்தத் திறன்களைப் பெற்றோா், புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்தில், முதல் தளத்தில் அமைந்துள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பத்தினைப் பெற்று, நவம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04322-228840 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.