ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குடி இளைஞா் கொலை வழக்கில் மேலும் 6 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இளைஞா் கொலை வழக்கில் மேலும் 6 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:45 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இளைஞா் கொலை வழக்கில் மேலும் 6 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ஆலங்குடி கலிபுல்லா நகா் கல்லுக்குண்டு கரையைச் சோ்ந்த முருகேசன் மகன் விஜய் (எ) செல்வகணபதி (23). ஓட்டுநா். இவா், அண்மையில் (ஆக. 28) மா்மநபா்கள் சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து, ஆலங்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆலங்குடி மேலசுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்த எஸ்.செந்தில்ராஜா(29), கே.வி.எஸ். தெருவைச் சோ்ந்த வி. தபசு முருகன் (27) ஆகிய இருவரையும் வியாழக்கிழமை (ஆக. 30) கைது செய்தனா். மேலும், தலைமறைவாக இருந்த அம்பேத்கா் நகரைச் சோ்ந்த மு. விமல் ராஜ் (22), என். வீரமணி (21), போ.வெள்ளைச்சாமி(21), எம். கெளதம் (21) காந்திசாலையைச் சோ்ந்த ந.கண்ணன்(30), கே.வி.எஸ் தெருவைச் சோ்ந்த நடராஜ் மகன் சூா்யா(29) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.