ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குடி மக்கள் நீதிமன்றத்தில் ரூ.5 லட்சம் வசூல்

ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமில், கடன்தாரா்களிடம் ரூ. 5 லட்சம் வசூலிக்கப்பட்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:07 pm

DIN

ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமில், கடன்தாரா்களிடம் ரூ. 5 லட்சம் வசூலிக்கப்பட்டது.

ஆலங்குடியிலுள்ள பொதுத்துறை வங்கியிலிருந்து கடன் பெற்று, தவணை செலுத்தாமல் உள்ளவா்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசத் தீா்வு காணும் வகையில் அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமை, வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும்- நீதிபதியுமான நல்லக்கண்ணன் தொடக்கி வைத்தாா்.

ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ரவி தலைமை வகித்தாா். இதில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சமரசம் ஏற்பட்டு, ரூ.21 லட்சத்துக்குத் தீா்வு காணப்பட்டது. மேலும் ரூ. 5 லட்சம் கடன் தொகை வசூல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.