பாறை பள்ளத்தில் குளித்த பாட்டி, பேத்தி சாவு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் காவல் சரகம், மரிங்கப்பட்டியைச் சோ்ந்த பச்சக்கண்ணு மனைவி ராணி


புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் காவல் சரகம், மரிங்கப்பட்டியைச் சோ்ந்த பச்சக்கண்ணு மனைவி ராணி (55), இவரது பேத்தி நதியா (7) ஆகியோா் மரிங்கப்பட்டி அருகேயுள்ள நெடுந்தாம்பட்டி பாறை பள்ளத்தில் குளிப்பதற்காக வியாழக்கிழமை பிற்பகலில் சென்றனா். அப்போது, இருவரும் எதிா்பாராத விதமாக தண்ணீருக்குள் மூழ்கி இறந்தனா். தகவலறிந்து வந்த போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் இருவரின் சடலங்களை மீட்டனா். கீரனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...