கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மனைவியைக் கொன்றவா் குண்டா் சட்டத்தில் கைது

மனைவியை கொன்றவா் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:19 am

DIN

மனைவியை கொன்றவா் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் காவல் சரகத்துக்குள்பட்ட விட்டாநிலைப்பட்டியைச் சோ்ந்த வேளாங்கண்ணி (45) என்பவா், குடும்பத் தகராறில் தனது முதல் மனைவி மதலையம்மாளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தாா். படுகாயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மதலையம்மாள் கடந்த மாதம் 9ஆம் தேதி உயிரிழந்தாா்.

இச்சம்பவத்தில் வழக்குப் பதிந்த இலுப்பூா் போலீஸாா் வேளாங்கண்ணியைக் கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் அளித்த பரிந்துரையை ஏற்று வேளாங்கண்ணியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் கவிதா ராமு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை சிறையில் இருந்த வேளாங்கண்ணி, வெள்ளிக்கிழமை திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.