பத்து வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி, அரசர்குளம் அருகே மாணிக்கம் குடியிருப்பைச் சேர்ந்தவர், முருகையா மகன் அஜித்குமார் (22). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பிப். 4ஆம் தேதி போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அஜித்குமாரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு சிறப்பு வழக்குரைஞர் த. அங்கவி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின் நிறைவில் நீதிபதி ஆர். சத்யா வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி அஜித்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 35 ஆயிரம் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு நிவாரண உதவியாக ரூ. ஒரு லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


