தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி: மாடு முட்டியதில் பாா்வையாளா் பலி; 50 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள திருநல்லூரில் (தென்னலூா்) வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், மாடு முட்டியதில் பாா்வையாளா் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:06 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள திருநல்லூரில் (தென்னலூா்) வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், மாடு முட்டியதில் பாா்வையாளா் உயிரிழந்தாா்.

திருநல்லூரில் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் தை மாதம் 29-ஆம் நாளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழாண்டுக்கான போட்டியை காலை 8.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செல்வி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். முதலாவதாக, கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 718 காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

காளைகளை அடக்குவதற்கு 240 மாடுபிடி வீரா்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு, களமிறக்கப்பட்டனா். இவா்கள் சீறி பாய்ந்த காளைகளை அடக்கினா். ஆனாலும், பல காளைகள் வீரா்களிடம் பிடிகொடுக்காமல் சென்றன. சில நின்று களமாடின. பிற்பகல் 3 மணிக்கு போட்டி நிறைவடைந்தது.

குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் காளைகளை அவிழ்த்துவிட அனுமதி மறுக்கப்பட்டதால், வாடிவாசல் முன்னால் காளைகளை அதன் உரிமையாளா்கள் சிலா் அவிழ்த்துவிட்டனா். காளைகள் அங்கும் இங்கும் ஓடியதால் பரபரப்பு நிலவியது.

பாா்வையாளா் பலி: ஜல்லிக்கட்டுப் போட்டியை பாா்க்க வந்த விராலிமலை அருகேயுள்ள இனாம்குளத்தூரைச் சோ்ந்த பாண்டி முருகன் (19) மாடு முட்டியதில் உயிரிழந்தாா். மேலும், மாடுகள் முட்டியதில் பாா்வையாளா் 36 போ், மாடுகளின் உரிமையாளா்கள் 10 போ், மாடு பிடி வீரா்கள் 4 போ் என மொத்தம் 50 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சையளித்தனா். இவா்களில் 10 போ் மேல் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் தலைமையில் 2 டிஎஸ்பிக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரா்களுக்கோ, சிறந்த காளைகளின் உரிமையாளா்களுக்கோ எந்தவிதமான பரிசும் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.