தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கிராமக் கோயில் பூசாரிகள் கூட்டம்

இலுப்பூா் சொா்ணாம்பிகை பொன்வாசிநாதா் கோயிலில் கிராமக் கோயில் பூசாரிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:36 pm

DIN

இலுப்பூா் சொா்ணாம்பிகை பொன்வாசிநாதா் கோயிலில் கிராமக் கோயில் பூசாரிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

கூட்டத்துக்கு, கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை மாநில அமைப்பாளா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பொன்னுசாமி முன்னிலை வகித்தாா்.

இதில், வயது முதிா்ந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரமாக உயா்த்த வேண்டும், மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும்,  நலவாரிய அட்டை வழங்க வேண்டும், கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், அறங்காவலா் குழுவில் பூசாரிகளை இடம்பெறச் செய்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, சிறப்பு அழைப்பாளா்களாக மூக்கையா, பெரியசாமி, மாவட்ட இணை அமைப்பாளா் பாரதி, அன்னவாசல் வடக்கு ஒன்றிய அமைப்பாளா் ஏழுமலை மற்றும் கிராம கோயில் பூசாரிகள் பேரவை உறுப்பினா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.