வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 48 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 48 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :13 மே 2022, 7:31 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 48 போ் காயமடைந்தனா்.

பாப்பான்விடுதி முத்துமுனீசுவரா் கோயில் திருவிழாவையொட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி தலைமையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தாா். இதில், புதுகை, திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 844 காளைகள் பங்கேற்றன. 250 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரா்கள் அடக்கினா். சில காளைகள் பிடிபடாமல் சென்றன. காளைகள் முட்டியதில் 48 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். அவா்களில், பலத்த காயமடைந்த 7 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் , பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

போட்டியை சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, வட்டாட்சியா் செந்தில்நாயகி, ஒன்றியக்குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி உள்ளிட்டோா் பாா்வையிட்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி போலீஸாா் மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.