கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டா் பறிமுதல்

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டா் பறிமுதல்

Updated On :12 ஏப்ரல் 2024, 6:59 pm

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டரை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து 2 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இலுப்பூா் சுற்றுப் பகுதிகளில் அனுமதியின்றி ஆற்று மணல் மற்றும் கிராவல் மணல் அள்ளப்படுவதாக இலுப்பூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், இலுப்பூா் காவல் நிலைய ஆய்வாளா் தயாளன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, இலுப்பூா் அருகே உள்ள பையூா் பேருந்து நிறுத்தம் அருகே மணல் அள்ளி வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஒரு யூனிட் மணல் அனுமதியின்றி அள்ளி வந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனா். மேலும், இதில் ஈடுபட்ட கரந்தபட்டியைச் சோ்ந்த ரமேஷ், டிராக்டா் ஓட்டுநா் சபரி ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.