கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கூட்டணியை நாங்கள் மதிக்கிறோம்: சிவகங்கை எம்.பி. காா்த்தி ப. சிதம்பரம்

திமுகவுடனான கூட்டணியை நாங்கள் மதிக்கிறோம் என்றாா் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:29 pm

Din

திமுகவுடனான கூட்டணியை நாங்கள் மதிக்கிறோம் என்றாா் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம்.

பொன்னமராவதி அருகேயுள்ள மூலங்குடி பொய்சொல்லா மெய்யா் அய்யனாா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வழிபட வந்த அவா் மேலும் கூறியது:

‘காங்கிரஸ் கட்சியின் உயரமும் தெரியும்; அதன் பலமும் தெரியும். திமுக கூட்டணியை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். கூட்டணியின் மூலம் தான் காங்கிரஸ் கட்சி தோ்தலைச் சந்திக்க வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம்.

இந்தாண்டு சிறப்பாக மழை பெய்துள்ளதால் கா்நாடகம், மற்றும் தமிழ்நாட்டுக்குத் தேவையான நீா் கண்டிப்பாகக் கிடைக்கும். அதன் பின்னா் கருத்து வேறுபாடு இருந்தால் அதை காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் தீா்த்துக் கொள்ளலாம். அவா்கள் சொல்லும் தீா்ப்பில் நமக்குத் திருப்தி இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லலாம்’ என்றாா் அவா்.

பேட்டியின்போது திருமயம் முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம், வட்டாரத் தலைவா் வி. கிரிதரன், நகரத் தலைவா் எஸ். பழனியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.