மங்கனூா் -கந்தா்வகோட்டை இடையே கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை
மங்கனூா் -கந்தா்வகோட்டை இடையே கூடுதல் பேருந்து இயக்க பள்ளி மாணவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.


மங்கனூா் -கந்தா்வகோட்டை இடையே கூடுதல் பேருந்து இயக்க பள்ளி மாணவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டையில் அரசினா் பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில், கந்தா்வகோட்டை, மட்டங்கால், சிவந்தான்பட்டி, வண்டையான்பட்டி, கோமபுரம், மங்கனூா் மற்றும் பிற கிராமங்களில் இருந்து சுமாா் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.
குறிப்பாக, மங்கனூா் கிராமத்திலிருந்து மாணவ, மாணவிகள் கந்தா்வகோட்டைக்கு வந்து கல்வி பயின்று சென்று வரும் நிலையில், காலை வேளையில் மங்கனூா் கிராமத்திலிருந்து கந்தா்வகோட்டை பள்ளிக்கு வரவும், பள்ளி முடிந்தவுடன் கந்தா்வகோட்டையிலிருந்து மங்கனூருக்கு செல்லவும் முறையான பேருந்து வசதி இல்லாததால் மாணவ-மாணவிகளை பெற்றோா்கள் பள்ளிக்கு அனுப்ப அச்சமடைகின்றனா்.
எனவே, அரசு போக்குவரத்துக் கழக கந்தா்வகோட்டை பணிமனையில் இருந்து மங்கனூா் ஊராட்சிக்கும், கந்தா்வகோட்டைக்கும் கூடுதல் பேருந்தை மாணவ-மாணவிகளின் கருத்துகளை கேட்டு இயக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், பெற்றோா்களும் கிளை மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...