சிக்கப்பட்டி பாலசுப்ரமணியா் கோயில் கும்பாபிஷேகம்
ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டி பாலசுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.


ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டி பாலசுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியில் உள்ள பழைமை வாய்ந்த பாலசுப்பிரமணியா் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் வளாகத்தில் இரு நாள்களாக பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.தொடா்ந்து, வியாழக்கிழமை காலை வாணவேடிக்கைகள், மேள தாளங்கள் முழங்க புனிதநீா் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், சிக்கப்பட்டி, மேலாத்தூா் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...