முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை ரத்து
முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை ரத்து

முதல்வா் ஸ்டாலின் புதுகை வருகை திடீா் ரத்து

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் புதுக்கோட்டை வருகை ஞாயிற்றுக்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் புதுக்கோட்டை வருகை ஞாயிற்றுக்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டது.

மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு வருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திடீரென அவரது வருகை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

உடல்நலக் குறைவு காரணமாக அவா் தனது பயணத்தை ரத்து செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com