பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

காதலி இறந்த துக்கத்தில் பூச்சிமருந்து குடித்த காதலன் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே காதலியின் தற்கொலையை தொடா்ந்து, பூச்சிமருந்து குடித்த காதலன் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Published On :

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காதலியின் தற்கொலையை தொடா்ந்து, பூச்சிமருந்து குடித்த காதலன் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி வட்டத்தைச் சோ்ந்த முருகேசன் மகள் புவனேஸ்வரி (23). இவருக்கும் நெம்மகோட்டை பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் அருள் வினோத் (28) என்பவருக்கும் காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக பேசிக் கொள்ளாமல் இருந்ததாகவும், இந்த நிலையில் புவனேஸ்வரி வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அங்கு சென்று வந்த அருள் வினோத், வெள்ளிக்கிழமை இரவு தான் பணிபுரிந்து வரும் பள்ளியின் பின்புறமுள்ள வாழைத் தோட்டத்தில் பூச்சிமருந்தைக் குடித்துள்ளாா். இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

வல்லத்திராக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.