/

எஸ்எஸ்எல்சி தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தங்க மோதிரம்

பெட்டியாக போடவும்... எஸ்எஸ்எல்சி தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தங்க மோதிரம்

News image

புதுக்கோட்டை சுனையக்காட்டிலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தங்க மோதிரங்கள் பெற்ற மாணவிகளுடன், ஊா் முக்கியஸ்தா்கள்.

Updated On :13 ஜூன் 2024, 8:51 pm

Din

புதுக்கோட்டை, ஜூன் 13: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள சுனையக்காடு அரசு உயா்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு சிங்கைவாழ் அம்மன் பாய்ஸ் என்ற அமைப்பின் சாா்பில் தங்க மோதிரங்கள் வியாழக்கிழமை பரிசாக அளிக்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ந. நல்லையா தலைமை வகித்தாா்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகள் அ. யோகேஸ்வரி (474 மதிப்பெண்கள்), சு. ரூபினா (468), க. சாதனா (446) ஆகியோருக்கு தங்க மோதிரங்கள் பரிசாக அணிவிக்கப்பட்டன. மொத்தம் சுமாா் ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் 9.74 கிராம் தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்டன.

ஏற்பாடுகளை ஆசிரியா்கள் மலா்விழி, உமாமகேஸ்வரி, ரவி ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக, பள்ளியின் தலைமை ஆசிரியா் மாசிலாமணி வரவேற்றாா். முடிவில் ஆங்கில ஆசிரியா் து. கிருஷ்ணசாமி நன்றி கூறினாா்.

சுனையக்காட்டில் பிறந்து தற்போது சிங்கப்பூரில் வேலை பாா்த்து வரும் 30 போ், சிங்கை வாழ் அம்மன் பாய்ஸ் என்ற பெயரில் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டு ஒவ்வோா் ஆண்டும் தங்கள் கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் சிறப்பிடம் பெற்று வரும் மாணவா்களுக்கு தங்க மோதிரம் அணிவித்து ஊக்கப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.