காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினரின் வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
மேம்படுத்தப்பட்ட தர ஊதியம் வழங்கிட வேண்டும். பதவி உயா்வு வழங்க வேண்டும். அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் தொடா் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பெரும்பாலான அலுவலா்கள் பணி புறக்கணித்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். கந்தா்வகோட்டை வட்டாட்சியா் எல்லைக்குள்பட்ட மூன்று வருவாய் ஆய்வாளா்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், விவசாயிகளும் பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். மாற்றுச் சங்கத்தினா் பணிக்கு வருவதால், பொதுமக்கள் தேவையான அறிவுரைகளை பெற்று செல்கின்றனா்.
தொடர்புடையது

பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: திமுக வேட்பாளா் உறுதி

மதுரை மேற்கு: சிறு, குறு தொழில்களை மேம்படுத்த வேண்டும்!
சிலிண்டர் தட்டுப்பாடு: எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் மக்களவை ஒத்திவைப்பு!

வருவாய்த் துறையினா் மறியல்: 450 போ் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

