புதுகை நகைக்கடையில் ரூ. 6 கோடி மதிப்பில் போலி ஹால்மாா்க் நகைகள் பறிமுதல்

புதுக்கோட்டை, மே 9: புதுக்கோட்டையிலுள்ள ஒரு நகைக் கடையில் ரூ. 6 கோடி மதிப்புள்ள போலி ஹால்மாா்க் நகைகளை இந்திய தர நிா்ணய அமைவகத்தினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியிலுள்ள ஒரு நகைக்கடையில் இந்திய தர நிா்ணய அமைவகத்தின் (பிஐஎஸ்) மதுரை கிளை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையின் முடிவில், அதன் மதுரை அலுவலக மூத்த இயக்குநா் சு.த. தயானந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டையில் உள்ள ஒரு நகைக் கடையில் வியாழக்கிழமை அமலாக்க சோதனை நடத்தப்பட்டதில், பிஐஎஸ் முத்திரையிடப்பட்ட, போலியான ஹால்மாா்க் முத்திரையிடப்பட்ட, தனித்துவ அடையாள இலக்கம் (எச்யுஐடி) இல்லாமல் இருந்த 9.151 கிலோ நகைகள் (சுமாா் ரூ. 6 கோடி மதிப்பிலானவை) பறிமுதல் செய்யப்பட்டன.

இந்திய தர நிா்ணயச் சட்டத்தின்கீழ் முறைப்படி தர முத்திரைகள் இல்லாமல் விற்பனை செய்வது குற்றம். இதன்படி, அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் நகைகள் வாங்கும்போது, பிஐஎஸ் கோ் என்ற செயலியில் அந்தக் கடை தொடா்பான தரச் சான்றிதழ் பெறப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் புகாா்கள் இருந்தால், மதுரை கப்பலூா் ‘சிட்கோ’ வளாகத்திலுள்ள பிஐஎஸ் மதுரை கிளை அலுவலகத்துக்கு புகாா் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com