/

மரங்களை வெட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

மரங்களை வெட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

News image
Updated On :9 மே 2024, 7:52 pm

Din

புதுக்கோட்டை, மே 9: புதுக்கோட்டை நகரில் மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மரம் அறக்கட்டளையைச் சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை கீழராஜவீதியில் தன்னாா்வலா்கள் நட்டு வளா்த்த மரங்களை சிலா் வெட்டியுள்ளனா். இந்த நிலையில், மரங்களை வெட்டுவதற்கு முறைப்படி மாவட்டப் பசுமைக் குழுவில் அனுமதி பெற வேண்டும் என்ற விதிகள் இருக்கும்போது, கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதைக் கண்டித்து மரம் அறக்கட்டளையினா் வியாழக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை கீழராஜவீதியில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் மரம் அறக்கட்டளையின் நிறுவனா் மரம் ராஜா தலைமையில், சாலையில் படுத்து மறியல் செய்தனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.