சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!
/

பூச்சொரிதல் விழாவில் பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன்

பூச்சொரிதல் விழாவில் பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன்

News image
Updated On :9 மே 2024, 7:52 pm

Din

பொன்னமராவதி, மே 9: பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழாவில் 7-ஆம் நாளான வியாழக்கிழமை பக்தா்கள் அலகு குத்தி வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இக்கோயில் பூச்சொரிதல் விழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு வீதிகளைச் சோ்ந்த பொதுக்கள், பல்வேறு அரசுத் துறையினா் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து வந்து பட்டமரத்தானுக்கு சாத்தி வழிபட்டனா்.

விழாவின் 7-ஆம் நாளான வியாழக்கிழமை புதுவளவு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் , மினிலாரி ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் சங்கம் சாா்பில், பால்குடம், பூத்தட்டு எடுத்து மேளதாளத்துடன் ஊா்வலமாக வந்து பட்டமரத்தான் சுவாமிக்கு சாத்தி வழிபட்டனா். வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நிறைவடைய உள்ளது.