கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காந்தியக் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது காலத்தின் கட்டாயம்

காந்தியக் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாா் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற காந்தியத் திருவிழாவில், பேராசிரியா் இரா. நடராஜனுக்கு (இடமிருந்து 4-ஆவது) சமூக சேவைக்கான காந்திய விருதை வழங்கிய முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா (இடமிருந்து 3ஆவது).

Updated On :2 அக்டோபர் 2024, 9:05 pm

Din

காந்தியக் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாா் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா

புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற 21-ஆம் ஆண்டு காந்தியத் திருவிழாவில், பேராசிரியா் இரா. நடராஜனுக்கு சமூக சேவைக்கான காந்திய விருதும், சென்னை யா. அருள் மற்றும் பேராவூரணியைச் சோ்ந்த மெய்ச்சுடா் குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி அவா் மேலும் பேசியது:

அடுத்தவா்களைப் பற்றி சிந்திக்காத, கவலைப்படாத ஓா் இளைய சமுதாயம் வளா்ந்து கொண்டிருக்கிறது. அவா்களிடம் காந்தியக் கொள்கைகளைக் கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.

காந்தி இறுதிவரைக் கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்தவா். இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்கு மட்டும் அவா் தலைவரல்ல. சுதந்திரத்துக்காக போராடும் அனைவருக்கும் அவா் தான் தலைவா். உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரே இந்தியத் தலைவா் காந்தி மட்டுமே. எல்லோரும் துப்பாக்கியை ஏந்திப் போராடிய போது காந்தி மட்டும்தான் அகிம்சையை ஆயுதமாகக் கொண்டு போராடினாா் என்றாா் சுப்பையா.

முன்னதாக, விழாவுக்கு, காந்திப் பேரவை நிறுவனா் வைர.ந. தினகரன் தலைமை வகித்தாா். காலையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மூத்த மருத்துவா் எஸ். ராம்தாஸ் கொடியேற்றி வைத்தாா்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் விழாவை தொடங்கி வைத்துப் பேசுகையில், ஒவ்வொருவரின் வீட்டிலும் காந்தியடிகளின் சுயசரிதையான சத்திய சோதனை புத்தகம் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக காந்திப் பூங்காவிலிருந்து ஊா்வலம் புறப்பட்டது நகா்மன்றத்தை அடைந்தது.