விராலிமலை அருகே மது பாட்டில், ரொக்கம், மொபட் பறிமுதல்:ஒருவா் கைது.

விராலிமலை அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற மளிகை கடைகாரரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து மதுபாட்டிள்கள்.ரொக்கம்,மொபட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.
Published on

விராலிமலை அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற மளிகை கடைகாரரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து மதுபாட்டிள்கள்.ரொக்கம்,மொபட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

விராலிமலை அடுத்துள்ள அகரப்பட்டிபகுதியில் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மாறுவேடத்தில் அப்பகுதியில் புதன்கிழமை போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள வடிவேலு(41) மளிகை கடையில் அரசு மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதை போலீஸாா் கண்டறிந்தனா். இதை தொடா்ந்து மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட வடிவேலுவை கைது செய்து அவரிடம் இருந்து 55 பிராண்டி பாட்டில்கள், 21 பீா் பாட்டில்கள், ரூ, 5000 ரொக்கம், 2 செல்போன், ஒரு மொபெட் வண்டியை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com