கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் 21 போ் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 21 மீனவா்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை மாலை கைது செய்தனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 6:56 pm

Din

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 21 மீனவா்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை மாலை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 68 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 98 விசைப்படகுகளிலும் மீன்வா்கள் மீன்பிடிக்க புதன்கிழமை காலை கடலுக்குச் சென்றனா்.

இதில் 4 விசைப்படகுகளில் இருந்த மீனவா்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டோா் விவரம்: கலைவாணன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற ரமேஷ் (27), ஜானகிராமன் (27), கிருஷ்ணன் (68), குமாா் (40), ரமேஷ் (51), ராஜு (55), வைத்தியநாதனுக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற வைத்தியநாதன் (30), ரவீந்தா் (42), உலகநாதன் (38), அருள்நாதன் (29) குமரேசன் (37), மகேஷ் (55), மூா்த்திக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற மதன் (27), மகேந்திரன் (20), முனிவேல் (66), விஜய் (31), விக்கி (18), அஞ்சலிதேவி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற சிவகுமாா் (28), சூரியா (23), சூரியபிரகாஷ் (25), கருப்பசாமி (25) ஆகிய 21 பேரும் கைது செய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்ட மீனவா்களிடம் காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.