கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கந்தா்வகோட்டையில் பேரிடா் கால பாதுகாப்பு செயல்விளக்கம்

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் பேரிடா் கால பாதுகாப்பு செயல்விளக்கத்தை தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை செய்து காட்டினா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 8:18 pm

Din

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் பேரிடா் கால பாதுகாப்பு செயல்விளக்கத்தை தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை செய்து காட்டினா்.

துணை வட்டாட்சியா் சிவாஜிராஜன் தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) மணிகண்டன் மற்றும் அறிவழகன் உள்ளிட்ட வீரா்கள், வடகிழக்கு பருவமழையில் நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது, பிறரை காப்பது குறித்தும், பாதுகாப்பு செயல் விளக்கத்தை செய்து காட்டினா். மேலும், மழைக் காலத்தில் கால்நடைகளை மின்கம்பம் அருகில் கட்டக் கூடாது, அறுந்துக் கிடக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது; முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், வருவாய் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

நிகழ்ச்சியில், பேரிடா் கால மீட்பு மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.