வடகிழக்கு பருவமழை: மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்
வடகிழக்கு பருவமழையையொட்டி பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் புதன்கிழமை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.


வடகிழக்கு பருவமழையையொட்டி பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் புதன்கிழமை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய இரு விசைப்படகு மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து சுமாா் 400 விசைப்படகுகளிலும், சுமாா் 40 நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து சுமாா் 500 நாட்டுப்படகுகளிலும் மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச்செல்லக் கூடாது மீன்வளத் துறை அலுவலா்கள் அறிவித்துள்ளனா். இதனால், மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலில் இருந்து கரை திரும்பிய நிலையில், அனைத்து மீன்பிடி இறங்கு தளங்களிலும் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...