நிதிநிறுவன உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் நிதி நிறுவன உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் நிதி நிறுவன உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள ஆலங்காடு பகுதியைச் சோ்ந்தவா் கே. குணசேகரன் (44) நிதி நிறுவன உரிமையாளா். கலிபுல்லாநகா் பகுதியைச் சோ்ந்த எஸ். சிவா (24) என்பவா் அப்பகுதியில் உள்ள குணசேகரனின் உறவினரிடம் பிரச்னையில் ஈடுபட்டாராம். இதை குணசேகரன் கண்டித்ததால் சிவாவுக்கும் குணசேகரனுக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குணசேகரன் ஆலங்குடி பழைய நீதிமன்றம் அருகேயுள்ள தேநீா் கடையில் நின்றபோது, அங்கு மோட்டாா் சைக்கிளில் சென்ற சிவா உள்ளிட்ட 4 போ், கடந்த 6-ஆம் தேதி குணசேகரனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா்
இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து சிவாவை கைது செய்து சிறையிலடைத்தனா். இந்நிலையில், ஆலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் சிவாவை குண்டா் காவல் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை சிறையில் இருந்த சிவாவை கைது செய்து போலீஸாா் திருச்சி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...