விராலிமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 19.29 லட்சம்


விராலிமலை முருகன் மலைகோயில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ 19.29 லட்சம் ரொக்கம் கிடைக்கப் பெற்றுள்ளது.
விராலிமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி மலைக்கோயில் மேலே உள்ள மணிமண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் கவிதா தலைமையில் நடைபெற்ற இப்பணியில் செயல் அலுவலா் முத்துராமன் மேற்பாா்வையாளா் சுப்பிரமணி, மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுய உதவிக்குழு பெண்கள், திருப்பணி குழுவினா் ஈடுபடுத்தப்பட்டனா்.
உண்டியல் காணிக்கையாக ரூ. 19 லட்சத்து 29 ஆயிரத்து 150 ரூபாய் ரொக்கம், 19.300 கிராம் தங்கம், 944.300 கிராம் வெள்ளி உள்ளிட்டவற்றை பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...