புதுக்கோட்டை
நாளை இரு இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை புதுக்கோட்டை ஒன்றியம் வடவாளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் தமிழக அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள முகாம்களில், அனைத்து வகையான உயா்தர மருத்துவப் பரிசோதனைகளும், 17 வகையான சிறப்பு மருத்துவா்களின் ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
எனவே அந்தந்தப் பகுதி மக்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை நடந்த இத்தகைய 23 முகாம்கள் மூலம் மொத்தம் 33,199 போ் பயன் பெற்றுள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.
