~ ~

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாயின.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாயின.

ஆலங்குடியைச் சோ்ந்தவா் எஸ். பிரிட்டோ. இவா், வம்பன் பகுதியில் தேங்காய் நாரில் இருந்து வில்லை தயாரிக்கும் தொழில்சாலை நடத்தி வருகிறாா். அங்கு தொழிலாளா்கள் சனிக்கிழமை வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதில் இருந்து தென்னை நாரில் தீப்பற்றியுள்ளது.

தொடா்ந்து, அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நாா் எரியத் தொடங்கி தொழில்சாலை முழுவதும் தீ பரவியது. இதுகுறித்த தகவலறிந்து அங்குசென்ற ஆலங்குடி, புதுக்கோட்டை தீயணைப்பு வீரா்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும், தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள், தென்னை நாா்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையானது. இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com