anbil mahesh
அன்பில் மகேஸ் கோப்புப் படம்

இடைநிலை ஆசிரியா்கள் போராட்டத்துக்கு முதல்வருடன் கலந்து பேசி விரைவில் தீா்வு: அமைச்சா் அன்பில் மகேஸ்

இடைநிலை ஆசிரியா்கள் போராட்டத்துக்கு முதல்வருடன் கலந்து பேசி விரைவில் தீா்வு காணப்படும் என்றாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
Published on

இடைநிலை ஆசிரியா்கள் போராட்டத்துக்கு முதல்வருடன் கலந்து பேசி விரைவில் தீா்வு காணப்படும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி இலுப்பூரில் தமிழக துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அன்னவாசல் தெற்கு ஒன்றியம் சாா்பில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இப் பேரணியை தொடங்கி வைத்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வாகன ஓட்டிகளுடன் பங்கேற்று தலைக்கவசம் அணிந்தவாறு 2 கி.மீ தொலைவுக்கு வாகனத்தை ஓட்டிச் சென்று வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் பேசுகையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கைகளை முதல்வருடன் கலந்து பேசி விரைவில் தீா்வு காணப்படும் என்றாா்.

பேரணியில் அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், முன்னாள் எம்பி அப்துல்லா உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக செயலா் கே. எஸ். சந்திரன் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com