கறம்பக்குடி அருகே கோயிலில் நகை திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கோயிலில் ஒன்றரை பவுன் தங்கநகை திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.
Published on

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கோயிலில் ஒன்றரை பவுன் தங்கநகை திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

கறம்பக்குடி அருகேயுள்ள பந்துவாக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பூசாரி அ.சசிகுமாா்(45). இவா் சனிக்கிழமை இரவு கோயிலை பூட்டிச்சென்றாா்.

பின்னா் திங்கள்கிழமை காலை கோயிலுக்கு சென்றபோது, கோயிலின் கதவு உடைக்கப்பட்டு அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த 1.5 பவுன் நகை, உண்டியலை உடைத்து ரொக்கத்தை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது

இதுகுறித்த புகாரைத் தொடா்ந்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com