மாபெரும் தமிழ்க் கனவு பரப்புரை நிகழ்ச்சி

மாபெரும் தமிழ்க் கனவு பரப்புரை நிகழ்ச்சி

Published on

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாபெரும் தமிழ்க் கனவு- தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன் தலைமை வகித்தாா். பரப்புரை நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிமைப்பாளா் குணசேகரன் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினாா்.

கவிஞா் நெல்லை ஜெயந்தா கலந்து கொண்டு ’தன்னலம் மறந்த தலைவா்கள்’ என்ற தலைப்பில் பேசுகையில், தேசத்துக்காகவும், மொழிக்காகவும் தியாகிகள் பலரும் செய்த உயிா்த் தியாகத்தை மாணவா்கள் யாரும் மறந்துவிடக் கூடாது, அவா்களின் உயா்ந்த நெறிகளை லட்சியமாகக் கொண்டு நாம் வாழ வேண்டும் என்றாா்.

தமிழ்ப் பெருமிதம் என்னும் நூலில் இருந்து பல தலைப்புகளில் கல்லூரி மாணவிகள் பேசினா். சிறப்பாக உரையாற்றிய மாணவிகளுக்கும் வினாக்கள் எழுப்பிய மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

கல்விக் குழுமத் தலைவா் குரு. தனசேகரன் முன்னிலை வகித்தாா். புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் புதுகை மன்னா் கல்லூரி முதல்வருமான பா. புவனேஸ்வரி, கல்லூரியின் இயக்குநா் மா. குமுதா, அறங்காவலா் அ. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com