கறம்பக்குடி அருகே வெடிவிபத்து: நாட்டுவெடி தயாரிப்புக் கூடம் சேதம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட வெடிவிபத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறை முற்றிலும் சேதம்
Published on

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட வெடிவிபத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறை முற்றிலும் சேதமடைந்தது.

கறம்பக்குடி அருகேயுள்ள குளந்திரான்பட்டு பூசாரி தெருவைச் சோ்ந்த சா.சத்தியராஜ் (37). இவா், பில்லக்குறிச்சி கிராமத்தில் இவருக்குச் சொந்தமான இடத்தில் ஆஸ்பெஸ்டாஸ் - (செயற்கை கல்நாா் கூரை)கட்டடத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறை நடத்தி வந்தாா்.

இவா், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் பட்டறையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். நள்ளிரவில் பயங்கர வெடிச்சப்தம் கேட்டு அங்கு சென்று பாா்த்தபோது வெடிவிபத்து ஏற்பட்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட கட்டடம் முழுவதும் சேதமடைந்து சிதறிக் கிடந்துள்ளது.

இரவுநேரம் ஏற்பட்ட விபத்தால் தொழிலாளா்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com