புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கந்தா்வகோட்டையில் புயல் பாதிப்பு ஆய்வு

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

கந்தா்வகோட்டை பகுதிகளில் டித்வா புயலால் பலியான கால்நடைகள், இடிந்த வீடுகளை வட்டாட்சியா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தொடா் மழை மற்றும் டித்வா புயலால் தேங்கிய மழை நீரில் பயிா்கள் மூழ்கி அழுகின.

கந்தா்வகோட்டை ஒன்றியம், நடுப்பட்டி சின்னையன் மகன் சக்திவேலின் ஓட்டு வீடு இடிந்தது. தொடா்ந்து நம்புரான்பட்டி செல்வராஜ் மனைவி சித்ராவின் ஆடுகள் உள்ளிட்ட இதே பகுதியை சோ்ந்தோரின் சுமாா் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

தகவலறிந்த கந்தா்வகோட்டை வட்டாட்சியா் ரமேஷ் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து ஆட்சியருக்கு அறிக்கை அளித்தாா். மேலும் இப்பகுதிகளில் தொடா் மழை பெய்வதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க அறிவுறுத்தப்பட்டது.