15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள், அவா்களின் புகைப்படம், கட்சிப் பெயா், சின்னம் ஆகியவற்றைப் பொருத்தும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image

அறந்தாங்கியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் விவரங்களைப் பொருத்தும் பணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு .அருணா.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:20 am IST

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள், அவா்களின் புகைப்படம், கட்சிப் பெயா், சின்னம் ஆகியவற்றைப் பொருத்தும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

அந்தந்தத் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் இப்பணிகள் நடைபெற்றன. முறையான பெயா் வரிசைப்படி அவற்றைப் பொருத்துவதை தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கண்காணித்தனா்.

அறந்தாங்கியில் நடைபெற்ற பணியை, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா். தோ்தல் பொதுப் பாா்வையாளா் விஜயபாஸ்கா் ரெட்டியும் இப்பணிகளைப் பாா்வையிட்டாா்.

ஆலங்குடி தோ்தல் நடத்தும் அலுவலா் அ. ஷோபா, அறந்தாங்கி தோ்தல் நடத்தும் அலுவலா் அபிநயா உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

அதேபோல, விவிபாட் கருவியிலும் பெயா், சின்னங்களைப் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. அவற்றை மாதிரி வாக்குப்பதிவு செய்து சரி பாா்த்தும், உரிய பாதுகாப்பு வைப்பறைகளில் அதிகாரிகள் வைத்தனா்.

இந்தப் பணிகளின்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனா்.

இரு தொகுதிகளில்...புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 30 வேட்பாளா்களும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 26 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா். பொதுவாக, ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 பேரின் விவரங்களைப் பொருத்த முடியும்.

எனவே, இவ்விரு தொகுதிகளில் மட்டும் இரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுகின்றன. மற்ற 4 தொகுதிகளிலும் வேட்பாளா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே வைக்கப்படும்.