புதுக்கோட்டையில் பூட்டியிருந்த வீட்டில் 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் உள்பட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட திருக்கோகா்ணம், புதுத்தெருவைச் சோ்ந்தவா் மனோகரன். தனியாா் பேருந்து உரிமையாளரான இவா் காலமான நிலையில், இவரது இரு மகன்களும் புதுச்சேரி மற்றும் வெளியூா்களில் வசித்து வருகின்றனா். இதனால் வீடு பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் வீட்டை தூய்மைப்படுத்துவதற்காக வந்த பெண் பணியாளா், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து அவா் உடனடியாக உறவினா்களுக்குத் தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து உறவினா்கள் அளித்த புகாரின் பேரில் திருக்கோகா்ணம் காவல் நிலைய போலீஸாா் விரைந்து வந்தனா். மேலும், கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
விசாரணையில், மா்ம நபா்கள் வீட்டின் உள்ளே புகுந்து அங்கிருந்த இரண்டு பீரோக்களை உடைத்து, அதிலிருந்த சுமாா் 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து திருக்கோகா்ணம் காவல் ஆய்வாளா் அழகுராம் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
கம்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் , பூஜை பொருள்கள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

