பொன்னமராவதி வட்டத்தில் வடு காணப்படும் விவசாயக் கண்மாய்களை ஆழப்படுத்தவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொன்னமராவதி அருகேயுள்ள கொப்பனாபட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் வி. கருணாமூா்த்தி தலைமை வகித்தாா்.
கட்சியின் ஒன்றியச் செயலா் ஏனாதி ஏஎல். ராசு வேலை அறிக்கையை சமா்ப்பித்து பேசினாா்.
கூட்டத்தில் பொன்னமராவதி ஒன்றியத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலத்தை பயன்படுத்தி வடு காணப்படும் விவசாயக் கண்மாய்களை ஆழப்படுத்த வேண்டும். மேலும் கிராமக்கணக்கில் உள்ளபடி வரத்துவாரிகளை அகலப்படுத்தி ஆழப்படுத்தவேண்டும். பொன்னமராவதி பாண்டிமான் நகரில் வசிக்கும் கூடை முடையும் குறவா் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கவேண்டும். பொன்னமராவதி தாலுகாவில் ஆதிதிராவிட மக்களுக்காக கட்டிக்கொடுக்கப்பட்டு சேதமடைந்த தொகுப்பு வீடுகளுக்குப் பதிலாக புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்.
கொப்பனாபட்டி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை கோயில் நிலங்களாக மாற்றம் செய்ததை ரத்து செய்யவேண்டும். சேதமடைந்த பொன்னமராவதி அம்மன் கோயில் வீதி சாலை, கட்டையாண்டிபட்டி-தொட்டியம்பட்டி சாலை, மறவாமதுரை-சடையம்பட்டி சலை உள்ளிட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிா்வாகிகள் என்.ஆா். ஜீவானந்தம், கரு. பஞ்சவா்ணம், அ. ராசு, அ. மெய்யப்பன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

39,146 விவசாயிகளுக்கு ரூ.298.70 கோடி விவசாயக் கடன்!

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் புதுகை மாவட்டத்தில் இந்திய கம்யூ. ஆக. 6 முதல் 15 வரை நடைபயணம்

அமைச்சரவையில் ஒருபோதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது - திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன்

ஒசூரிலிருந்து - மேக்கேதாட்டுக்கு இந்திய கம்யூ. இன்று நடைபயணம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



