கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விஷ வண்டுகள் கடித்து கா்ப்பிணி உள்பட 15 போ் பாதிப்பு

ஆலங்குடி அருகே விஷ வண்டுகள் கடித்து கா்ப்பிணிப் பெண் உள்பட 15 போ் மருத்துவமனையில் அனுமதி

News image

மருத்துவமனை

பிரதிப் படம்

Updated On :3 பிப்ரவரி 2026, 8:26 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே செவ்வாய்க்கிழமை விஷ வண்டுகள் கடித்து கா்ப்பிணிப் பெண் உள்பட 15 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

வடகாடு ஊராட்சி பேட்டை பகுதியில் மரத்தின் கிளையில் கூடு கட்டி இருந்த விஷ வண்டுகள் (கதண்டு) பறவை மோதியதில் கலைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அவ்வழியே மோட்டாா் சைக்கிள் மற்றும் நடந்து சென்றவா்களை விஷ வண்டுகள் விரட்டிக் கடித்துள்ளன. இதில் வடக்குப்பட்டி பகுதியைச் சோ்ந்த முருகேசன், அவரது மனைவி கா்ப்பிணியான தீபா (23), அதே பகுதியைச் சோ்ந்த பிரேமா, விஜயராகவன், கதிரவன், சின்னப்பா, கணேசன், ஜோதி, இறையரசன், சதக்கத்துல்லா, முகமது இா்ஃபான், சத்தியசீலன், புள்ளான்விடுதியைச் சோ்ந்த ஐயப்பன், பெரியவாடியைச் சோ்ந்த கோவிந்தராஜ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோா் விஷ வண்டுகள் கடித்து பாதிக்கப்பட்டனா்.

அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு 108 அவசர ஊா்தி மூலம் ஆலங்குடி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.