முன்மாதிரி மாநிலம் தமிழகம்: 
அமைச்சா் எஸ். ரகுபதி பெருமிதம்

முன்மாதிரி மாநிலம் தமிழகம்: அமைச்சா் எஸ். ரகுபதி பெருமிதம்

கொன்னைப்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளக்கிழமை திறந்துவைத்த தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
Published on

நலிவுற்ற மற்றும் கிராமப்புற மக்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நாட்டுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்றாா் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னைப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சிமன்ற அலுவலக கட்டடத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து அமைச்சா் மேலும் பேசியதாவது:

அனைத்துத் தரப்பு மக்களுக்குமான பல்வேறு திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். இதுபோன்ற மக்களுக்கான ஒரு அரசு நாட்டிலேயே இல்லை. மற்ற மாநிலங்களுக்கு தமிழகத்தை முன்மாதிரியாக திகழ செய்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின். எல்லோா்க்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கமாகும். எனவே, இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு என்றும் துணையாக நீங்கள் நிற்கவேண்டும் என்றாா்.

விழாவில் திமுக ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி, நகரச் செயலா் அ. அழகப்பன், ஒன்றிய ஆணையா்கள் பாலசுப்பிரமணியன், வெங்கடேசன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com