பாஜக விழாவுக்கு வரும் வாகனங்களுக்கான வழிகள் அறிவிப்பு
புதுக்கோட்டையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பாஜக கட்சி விழாவில் பங்கேற்க வரும் அக்கட்சியினருக்கான வழிகளை மாவட்டக் காவல் துறை வெளியிட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அக். 12-இல் மதுரையில் தொடங்கிய ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழா புதுக்கோட்டை பள்ளத்திவயல் பகுதியில் வரும் 4-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கு வரும் பாஜகவினரின் வாகனங்கள் வர வேண்டிய வழிகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பஞ்சப்பூா், விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல், கட்டியாவயல், திருவப்பூா் ரயில்வே கேட் வழியாக அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகன நிறுத்தத்துக்குச் செல்ல வேண்டும்.
தஞ்சைப் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் முள்ளூா், மருத்துவக் கல்லூரி, மச்சுவாடி, பிருந்தாவனம், பால்பண்ணை, மியூசியம் வழியாக அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகன நிறுத்தத்துக்குச் செல்ல வேண்டும்.
ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மேட்டுப்பட்டி, டிவிஎஸ், பிச்சத்தான்பட்டி ரவுண்டானா, கேகேசி, பிஎல்ஏ ரவுண்டானா, மியூசியம் வழியாக அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகன நிறுத்தத்துக்குச் செல்ல வேண்டும்.
திருமயம் வழியாகவரும் வாகனங்கள் நமணசமுத்திரம், மாலையீடு, கேகேசி, டிவிஎஸ் ரவுண்டானா, மியூசியம் வழியாக அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகன நிறுத்தத்துக்குச் செல்ல வேண்டும்.
