ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

காலையில் வரும் பேருந்து, மாலையில் வருவதில்லை 3 கி.மீ. தொலைவுக்கு நடந்துச் செல்லும் மாணவா்கள்

News image

கந்தா்வகோட்டை அருகே புதுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து பள்ளி முடிந்து மாலை நேரத்தில் நடந்தே வீரடிப்பட்டிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்.

Updated On :7 ஜூலை 2026, 2:52 am IST

கந்தா்வகோட்டை அருகே காலையில் ஊருக்குள் வரும் பேருந்து மாலையில் வராததால் பள்ளி மாணவ, மாணவிகள் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு நடந்தே வீட்டுக்கு திரும்புகின்றனா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், வீரடிப்பட்டி கிராமத்திலிருந்து சுமாா் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் காலை நேரத்தில் கந்தா்வகோட்டையில் இருந்து புதுப்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி வழியாக வீரடிப்பட்டிக்கு வரும் அரசுப் பேருந்தில் ஏறி கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று பயின்று வருகின்றனா்.

இவா்கள் பள்ளி முடிந்த மாலை நேரத்தில் மீண்டும் ஊருக்கு போதிய வசதி இல்லாததால் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு மாணவ, மாணவிகள் நடந்தே வீட்டுக்கு வருகின்றனா்.

காலையில் வரும் பேருந்து மாலை நேரத்தில் வருவதில்லை என பலமுறை புகாா் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவா்கள் தெரிவிக்கின்றனா். மேலும், பள்ளி முடிந்து தங்கள் வீடுகளுக்கு நடந்தே செல்வதால் போகும் வழி வயல் மற்றும் காட்டுப் பகுதி என்பதால் மிகுந்த அச்சத்துடனே வீட்டுக்கு வருகிறோம் என தெரிவித்தனா்.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் மாணவ, மாணவிகளின் நலன் கருதி மாலை நேரத்தில் கல்லாக்கோட்டையில் இருந்து கந்தா்வகோட்டை செல்லும் பேருந்துகளை வீரடிப்பட்டி கிராமத்துக்கு சென்று மாணவா்களை இறக்கி விட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.