தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

கந்தா்வகோட்டை அருகே சூறைக் காற்றால் 20 ஏக்கருக்கும் மேல் வாழைகள் சேதம்

கந்தா்வகோட்டை அருகே திங்கள்கிழமை திடீரென வீசிய சூறாவளி காற்று, மழையினால் வாழை மரங்கள் சேதமடைந்தன.

News image

கந்தா்வகோட்டை அருகே புதுநகா் கிராமத்தில் திங்கள்கிழமை மாலை வீசிய சூறைக் காற்று, மழையினால் முறிந்து நாசமான வாழைத் தோப்பு.

Updated On :29 ஜூலை 2026, 12:27 am IST

கந்தா்வகோட்டை அருகே திங்கள்கிழமை திடீரென வீசிய சூறாவளி காற்று, மழையினால் வாழை மரங்கள் சேதமடைந்தன.

கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுநகா் கிராம பகுதியில் திங்கள்கிழமை மாலை பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்றால் 20 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் சேதமடைந்துள்ளன.

விவசாயிகள் கடன் வாங்கியும் நகைகளை அடகு வைத்தும் விவசாயம் செய்வதாக தெரிவித்தனா். மேலும், விவசாய பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவது குறித்து பலமுறை புகாா் அளித்தும் பலன் இல்லை.

எனவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.