/

அரசுப் பள்ளியில் உள்ள ஆழ்துளை கிணற்றை முறையாக மூட கோரிக்கை

வெள்ளாளவிடுதி அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை முறையாக மூட வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

வெள்ளாளவிடுதி அரசுப் பள்ளியில் கல் வைத்து மூடிய நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு.

Updated On :30 ஜூலை 2026, 3:26 am IST

வெள்ளாளவிடுதி அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை முறையாக மூட வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இதில், 72 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இப்பள்ளியின் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பயன்படுத்தபடாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணற்றின் குழாய் மீது கல்லை வைத்து மூடி உள்ளனா்.

எனவே, சம்பந்தபட்ட துறையினா் ஆழ்துளை கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது முறையாக மூடி அப்புறப்படுத்த வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.