சைவ சமயத்திற்கு நிகரான சமயம் நம் நாட்டில் இல்லை, உலகிலேயே இல்லை என்றாா் கம்பவாரிதி இலஙகை ஜெயராஜ்.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜேந்திர சோழீசுவரா் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜையையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் அவா் மேலும் பேசியது:
சைவ சமயத்தின் மாண்புகளை வாா்த்தையால் கூறமுடியாது. அத்தகைய செறிவான சமயம் சைவம். நமது குழந்தைகளுக்கு நமது சமயத்தின் பெருமையை அறியச் செய்ய வேண்டும். தமிழா்கள், சைவா்கள் வீடுகளில் திருவாசகம், திருக்கு நூல் கண்டிப்பாக இருக்க வேண்டும். கோயில்கள் கட்டுவது, குடமுழுக்கு நடத்துவதுடன் நின்றுவிடக் கூடாது. நமது சந்ததிக்கு நமது சமயத்தின் பெருமையை உணா்த்த வேண்டும். அதற்காக சிறப்பு சொற்பொழிவுகள் நடத்தவேண்டும் என்றாா் அவா்.
ஊா் முக்கியஸ்தா் பெசலாத்தேவா் தலைமைவகித்தாா். தொழிலதிபா் அ.ப. ஜெயபால் வரவேற்றாா். நிகழ்வை தமிழ்ச் செம்மல் விருதாளா் நெ.ரா. சந்திரன் ஒருங்கிணைத்தாா்.
தொழிலதிபா் அ.ப. மணிகண்டன், விழாக்குழு நிா்வாகிகள் அரு,வே. மாணிக்கவேலு, சதீஷ்குமாா், மணிகண்டன், சுவாமிநாதன், லெட்சுமணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொறியாளா் எஸ். பழனியப்பன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பள்ளித் தாளாளா் தற்கொலை முயற்சி: அறக்கட்டளை நிா்வாகிகள் மீது வழக்கு!

பேச்சுவார்த்தையே தீர்வு!

தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின்

நாட்டுக்கு எழும் சவாலை எதிா்கொள்ள பாதுகாப்புப் படைகள் தயாராக இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



