தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

‘பள்ளி மாணவா்களுக்கான காலை உணவு தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமானதாகவும், சத்தானதாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.

News image

மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு.அருணா.

Updated On :5 ஜூன் 2026, 3:31 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமானதாகவும், சத்தானதாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.

கோடைவிடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை தொடங்கியதையொட்டி, புதுக்கோட்டை அருகே திருமலைராயசமுத்திரத்திலுள்ள பாகீரதி அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை ஆட்சியா் மு. அருணா நேரில் சென்று பாா்வையிட்டாா்.

மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்துப் பாா்த்தாா். தொடா்ந்து, உணவு தயாரிக்கப்படுவது தொடங்கி மாணவா்களுக்கு பரிமாறப்படுவது வரை தரமாகவும், சுகாதாரமாகவும், சத்தானதாகவும் உணவு இருப்பதை அதிகாரிகள், ஆசிரியா்கள் அவ்வப்போது உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.