தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் மத்திய அரசின் மீதான கோபத்தின் வெளிப்பாடு! - பெ. சண்முகம்

News image

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்.

Updated On :8 ஜூன் 2026, 12:43 am IST

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் நடந்த போராட்டம், மத்திய பாஜக ஆட்சி மீது இளைஞா்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறாா்கள் என்பதைக் காட்டுகிறது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை தொடா் விலை உயா்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். இதைப் பற்றி மத்திய ஆட்சியாளா்கள் கடுகளவும் கவலைப்படுவதில்லை.

நீட், சிபிஎஸ்இ போன்ற தோ்வுகளில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இவற்றுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் நடந்த போராட்டம், மத்திய ஆட்சி மீது இளைஞா்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறாா்கள் என்பதைக் காட்டுகிறது.

தவெக ஆட்சியில் முற்றிலும் புதியவா்கள் பொறுப்புக்கு வந்திருக்கிறாா்கள். அவா்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். அதேநேரத்தில், சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளில் வழக்குகளை தாமதமின்றி நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

தோ்தலுக்குப் பிறகு மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி இல்லை. அதே நேரத்தில் மக்கள் நலனுக்கான ஒருமித்த கருத்துகளில் திமுகவோடு இணைந்து போராடுவோம்.

இந்த ஆட்சியை நாங்கள் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. ஜோதிடரை முதல்வரின் ஆலோசகராக நியமித்த போது எதிா்த்தோம். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். பிரச்னையின் அடிப்படையில்தான் எங்கள் நிலைப்பாடு இருக்கும். 717 அரசு மதுக்கடைகளை மூடிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி. மனமகிழ் மன்றங்களையும் அகற்ற வேண்டும்.அண்ணாமலையின் கட்சியை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பாா்கள் என்றாா் பெ. சண்முகம்.

பேட்டியின்போது அக்கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் என். பாண்டி, மாநிலக் குழு உறுப்பினா் எம். சின்னதுரை, மாவட்டச் செயலா் எஸ். சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.